பரதவர் முன்னேற்றப் பேரவை என்பது தமிழகம் முழுவதுமுள்ள பரதவர்களின் அனைத்து பிரிவுகளில் உள்ள முக்கிய நபர்களை கொண்டு 01/04/2021 அன்று தொடங்கப்பட்டது. இந்தப் பேரவை 28/12/2021 அன்று சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சங்கங்கள் பதிவுத்துறையில் முறையாக பதிவு செய்யப்பட்டு .239/2021 பதிவு எண் பெறப்பட்டுள்ளது. இந்த பரதவர் முன்னேற்றப் பேரவையின் நோக்கம். தமிழகம் முழுவதும் பரவி வாழும் பரதவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒன்றிணைப்பது ஆகும்.
இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்மதில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லென
கலிகெழு கொற்கை _அகம் 350
சோழ நாட்டின் தமிழ் பெரும் மன்னன் கரிகால் பெருவளத்தானை போற்றும் பட்டினப்பாலை பரதவர் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகிறது.
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர்
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடிந் துண்டாடியும்
மேற்குறிய பட்டினப்பாலை பாடல் பரதவர் மூலமாக தமிழரின் வருண கடவுள் வழிபாட்டை நாம் அறிகிறோம்.
1)பட்டினவர் (சின்ன பட்டினவர், பெரிய பட்டினவர், செட்டியார்,
வருணாகுல முதலி மற்றும் கரையர்).
2) பருவதராஜகுலம்
3) அரையர், அரையன், நுளையர்.
4) பரவர்,
5) பரதர்.
6) முக்குவர்
7. அளவர்.
8. சவளக்காரர்.
9. செம்படவர், நாட்டார்.
10.கடையர் (பட்டம் கட்டியர்)
11. ஓடக்காரர்.
12. குகவேளாளர்.
13. உப்பிலியர்
14. பெஸ்த்தா
போன்ற பல பெயர்களில் பரதவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்